மாத்தறை அத்துடாவ பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
தாய்(30), தந்தை(38) மற்றும் அவர்களது மகனுமே(14) இவ்வாறு பலியாகியுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடியும், நிர்க்கதியாகியுள்ளவர்களை பார்வையிடுவதையும் தவிர்க்குமாறு கடற்டைத் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளத்தில் சிறு படகுகள் மற்றும் வள்ளங்கள் மூலம் பார்வையிடச் செல்கின்றவர்கள், நீரோட்ட வேகம் அதிகரிக்கும் பட்சத்தில் அனர்த்தங்களை எதிர்நோக்க நேரிடலாம் என்றும் கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.