தலைமுடி அதிகம் உதிர்கிறதா, எதுவுமே அதற்கு தீர்வை வழங்கவில்லையா? கவலையை விடுங்கள். தலைமுடி உதிர்வதைத் தடுக்க ஏராளமான இயற்கை வழிகள் இருந்தாலும், வைட்டமின் சி அதிகம் நிறைந்த நெல்லிக்காயைப் போன்று எந்த ஒரு பொருளாலும் விரைவில் தீர்வளிக்க முடியாது.
தேவையான பொருட்கள்:
நற்பதமான நெல்லிக்காய் – 3-4
சீகைக்காய் – 3-4
செய்முறை:
இரவில் படுக்கும் முன் 1/2 கப் நீரில் நெல்லிக்காய் மற்றும் சீகைக்காயில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி நன்கு தடவி, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் நன்கு தேய்த்து அலச வேண்டும். குறிப்பாக இந்த மாஸ்க்கை போட்ட பின் ஷாம்பு பயன்படுத்தக் கூடாது. இந்த மாஸ்க்கை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்துவதன் மூலம் நல்ல மாற்றத்தைக் காணலாம்.