அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அடையாள அட்டைகளை மீள வழங்க விஷேட வேலைத் திட்டம்..

சீரற்ற காலநிலையின் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களின் காணாமல் போன அடையாள அட்டைகளை மீள பெற்றுக் கொள்வதற்காக விஷேட வேலைத் திட்டம் ஒன்று செயற்படுத்தப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடையாள அட்டை காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளரின் ஆலோசனைப்படி புதிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்க முடியும்.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும் என்று ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது.

குறித்த இந்நடவடிக்கைக்கு முதலிடம் வழங்க உள்ளதாகவும் குறித்த திணைக்களம் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)