Update – கவிக்கோ அப்துல் ரகுமானின் இறுதிச் சடங்கு நாளை மறுநாள்..

கவிஞரும், தமிழ்பேராசிரியருமான கவிக்கோ அப்துல் ரகுமான் மூச்சுத் திணறல் காரணமாக தனது 80 வது வயதில் இன்று(02) அதிகாலை சென்னை, பனையூரிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

இந்திய சாகித்ய அகாடமி விருது வென்ற கவிக்கோ அப்துல் ரகுமான், 1937ம் ஆண்டு மதுரையில் பிறந்தார்.

பல்வேறு விருதுகளுக்கும் படைப்புகளுக்கும் சொந்தக்காரரான கவிக்கோ அப்துல் ரஹ்மான், கடைசி வரை சினிமாவுக்கு பாடல்களை எழுதமாட்டேன் என தீர்க்கமாய் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் அவரது மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகிறார்கள்.

கவிக்கோ அப்துல் ரகுமானின் மகன் லண்டனில் இருந்து வர வேண்டியுள்ளதால், அப்துல் ரகுமானின் இறுதிச் சடங்கு, பனையூரில் நாளை மறுநாள்(04) நடைபெறும் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

(rizmira)