தமிழில் வெளிவந்த ‘நான் ஈ’ படத்தை இயக்கிய ராஜமௌலி, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கி வரும் படம் ‘பாகுபலி’. சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ், ராணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் இயக்குநர் ராஜமௌலி ” எனக்கு 3டி தொழிநுட்பம் பிடிக்காது. 3டி படத்தின் தரத்தைக்கூட்டுகிறது. ஆனால் எனக்கு படம் யதார்த்தமாக இருக்கவேண்டும்” என தெரிவித்தார்.
இதன் மூலம் பாகுபலி 3டியில் வெளிவரலாம் என்ற வதந்தி முடிவுக்கு வந்துள்ளது.