அனர்த்த மரணங்கள் 206 வரை உயர்வு – 170,486 குடும்பங்கள் பாதிப்பு..

வௌ்ளநிலை மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 18,000 குடும்பங்களின் சுமார் 69,000 பேர் வரை பாதுகாப்பான இடங்களில் தற்போதும் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகமான தற்காலிக பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன் அதன் எண்ணிக்கை 203 என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

இரத்தினபுரி, மாத்தறை, களுத்துறை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு அசாதாரண காலநிலையால் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக சுமார் 11,000 வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியளவோ சேதமடைந்துள்ளன.

குறித்த அனர்த்தம் காரணமாக 170,486 குடும்பங்களும், 658,490 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 206 பேர் உயிரிழந்ததுடன், 92 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

(rizmira)