திருகோணமலையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான பெரிய கடை ஜும்ஆ பள்ளிவாசல் மீது இன்று(03) அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அதிகாலை மக்கள் தொழுகைக்கு வந்தபோதே குறித்த இந்த சம்பவம் தொடர்பில் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த தாக்குதல் சம்பவத்தில் பள்ளிவாசல் பொருட்களுக்கு சேதம் விளைக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் முதல் இலங்கையில் சிறுபான்மையின சமூகமான முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளமையும் இதுகுறித்த விசாரணைகளின் மந்த கதியும் இங்கு குறிப்பிடத்தக்கது.

