ருஹுனு பல்கலையின் மூடப்பட்ட பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் திங்கள் ஆரம்பம்..

ருஹுனு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 05ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த அந்த பீடங்களின் விடுதிகளில் தங்கியிருக்கின்ற மாணவர்கள் நாளை(03) தமது விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

திடீரென ஏற்பட்ட அனர்த்த நிலமை காரணமாக ருஹுனு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பீடங்கள் அண்மையில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)