சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதிய குழு B இற்கான இன்றைய போட்டியில், தென்னாபிரிக்கா அணி 96 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 299 ஓட்டங்களை பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா 50 ஓவர்கள் நிறைவில் அம்லாவின் சதத்தின் உதவியுடன் 299 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் நுவன் பிரதீப் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் வெற்றி இலக்கான 300 ஐ நோக்கி ஆட்ட த்தை ஆரம்பித்த இலங்கை அணி முதல் பத்து ஓவர்களில் ஸ்திரமான நிலையை அடைந்த போதிலும் பின்னர் வேகமாக விக்கெட்டுக்களை இழந்து தோல்வியை தழுவியது.
இலங்கை அணி சார்பில் தரங்க அதிகபட்சமாக 57 ஓட்டங்களைப் பெற்றார்.
தென்னாப்பிரிக்கா சார்பில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய தாஹீர் ஆட்டநாயகனாக தெரிவானார்.