சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்காக வௌ்ளிப் பதக்கம் வென்று கொடுத்தவர் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க.
இவர் தற்போது தனது பதக்கத்தை ஏலத்தில் விடவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
தான் எதிர்நோக்கியுள்ள கடும் பொருளாதார நெருக்கடியே இதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2000 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 200m ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் சுசந்திகா வென்றார்.
ஆரம்பத்தில் இவரிற்கு மூன்றாம் இடமே கிடைத்தது. எனினும் அப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்ட மரியன் ஜோன்ஸ் ஊக்கமருந்து சேதனையில் சிக்கியமையால் அவரின் பதக்கம் பறிக்கப்பட்டது.
1948ன் பின் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதலாவது இலங்கையர் என்ற பெருமையும் அப்போது சுசந்திக்கா வசமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.