7 பேரை பலிகொண்ட இலண்டன் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக, அந்த அமைப்புடன் தொடர்புடைய இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலண்டனில் உள்ள உலகப் புகழ் பெற்ற இலண்டன் பிரிட்ஜில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தாறுமாறாக ஓடி பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இதனையடுத்து மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடினர். கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். குறித்த இந்த தாக்குதலில் 7 பேர் பலியாகினர். 48 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
7 பேரை பலிகொண்ட லண்டன் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக, அந்த அமைப்புடன் தொடர்புடைய இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.