சைட்டம் உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்..

சர்ச்சைக்குரிய மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விவகாரம் உட்பட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை அரச வைத்தியர் சங்கம் அடுத்த வாரம் மீண்டும் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னைய போராட்டங்களைப் போலவே இம்முறையும் பல்வேறு தொழிற்சங்கங்களும் சிவில் அமைப்புகளும் தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தரவுள்ளன எனவும், அதற்கான பேச்சுகள் இப்போது நடைபெற்று வருகின்றன எனவும் அச்சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் மஹிந்த அணியான கூட்டு எதிரணியினருடன் தாங்கள் நடத்திய பேச்சுகளின் பின் அவர்களும் தங்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(rizmira)