பாஸ்மதி அரிசி குறித்த பரிசோதனையின் பின்னர் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணை..

சதோசவின் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாகவும், பிளாஸ்டிக் அரிசி குறித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், முடிவு வெளியானதும், குறித்த இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் கண்டறியும் பொறுப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்படும் எனவும் நிறுவனத்தின் தலைவர் பி.எம்.கே.பி.தென்னகோன் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சதோசவினால் வழங்கப்படும் பாஸ்மதி அரிசியின் விற்பனை தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 16ம் திகதி டெண்டர் சபையின் அனுமதியுடனேயே குறித்த இந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நிலவும் நிலைமைகளுக்கு அமைய குறித்த அரிசியின் தரத்தை பரிசோதிக்க பொரல்லை மருத்துவ ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளது.

இது குறித்து இணையத்தளங்கள், முகநூல்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அரிசி குறித்த ஆய்வின் முடிவு வெளியான பின்னர் இந்த பிரச்சார ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். சதொசவிற்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு உரிய விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

(rizmira)