இலண்டன் தாக்குதலின் தேடப்படும் குற்றவாளிகளை பொலிசார் அறிவிப்பு..

7 பேரை பலிகொண்ட இலண்டன் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறி இரண்டு நபர்களின் பெயர்களை இலண்டன் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஏழு உயிர்களை பறித்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்தவன் முக்கிய குற்றவாளி என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில், முக்கிய குற்றவாளிகள் இருவரின் பெயர்களை இலண்டன் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குராம் ஷாஸத் மற்றும் ராசித் ரெடவுனே ஆகிய இருவரின் பெயர்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதில், குரான் ஏற்கனவே ஐ.எஸ் இயக்கத்தை ஆதரித்து வீடியோ வெளியிட்டிருந்தார் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

லண்டன் தாக்குதல் - தேடப்படும் குற்றவாளிகள் இவர்கள் தான்

இலண்டன் தாக்குதலை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது..

(rizmira)