நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் மேல், சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றும்(07) இடியுடன் கூடிய மழை பொழியக் கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்திலும் மழை பொழிய கூடும் என குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
மேலும், எட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 213 பேர் உயிரிழந்ததுடன், 149 பேர் காயமடைந்துள்ளதுடன் 77 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தேசிய கட்டிட ஆய்வு பணிமனையால் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை, ஹம்பந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை நிலவுகிறது.