மஹிந்த – மைத்திரி சந்திப்பு நடந்ததா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

சபாநாயகர், சுசில் பிரேமஜயந்த ஆகியோரது இல்லங்களில் இவ்விரகசிய சந்திப்புக்கள் நடந்து பின்னர் முன்னாள் ஜனாதிபதி மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் இல்லத்திற்குச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று அவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெறவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்,இது தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார்.