தெரேசா மேக்கு ஏற்பட்ட சோதனை!

பிரித்தானிய பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் தற்போதைய அரசாங்கமான கன்சர்வேடிவ் கட்சி ஒட்டுமொத்த பெரும்பான்மை பெற தவறியுள்ளது.

இதன் காரணமாக தொங்கு நாடாளுமன்றம் அமைக்க பிரித்தானியா தயாராகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இடம்பெற்ற பிரித்தானிய தேர்தலுக்கு பின்னர் தொழிற் கட்சி முன்னெற்றத்தை கண்டமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

பிரெக்சிட் மீதான ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளில் தனது கையை வலுப்படுத்த முயற்சிக்கும் நோக்கில், பாராளுமன்ற தேர்தலுக்கு பிரதமர் தெரேசா மே அழைப்பு விடுத்திருந்தார். எனினும் தேர்தல் முடிவுகள் அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தும் விடயமாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழிற்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பன், தெரேசா மேயை ராஜினாமா செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார், ஆனால் தன்னுடைய கட்சியை பிரித்தானியாவில் ஸ்திரத்தன்மைக்கு உறுதிப்படுத்துவதாக தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் வேறு எதையும் விட, நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு காலம் தேவை என தெரேசா மே மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய கன்சர்வேட்டிவ் கட்சி 315 ஆசனங்களையும், தொழிலாளர் கட்சி 265 ஆசனங்களையும் பெற்றுள்ளன.