கொழும்பு நகரின் வீதிகள் மற்றும் கொழும்பிற்கு நுழையும் வீதிகளில் இன்று(12) முதல் வீதி ஒரு மருங்கு முறையை கடுமையாக அமுல்படுத்தவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய காவற்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவற்துறைமா அதிபர், பிரியந்த ஜயகொடி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
காவற்துறை போக்குவரத்து பிரிவு மற்றும் நகர்ப்புற போக்குவரத்து பிரிவும் இணைந்து இந்த வீதி ஒரு மருங்கு முறையை மீறும் சாரதிகளை கைது செய்யவும், நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவும், விஷேட சோதனை நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.