இலங்கை அணியின் சகலதுறை வீரர் திஸர பெரேரா சாம்பியன்ஸ் கிண்ண பயிற்சி போட்டியின் போது உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.
கார்டிஃப்பில் இடம்பெற்ற பயிற்சியின் போது திஸர பெரேராவின் தலையில் பந்து தாக்கியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணியுடன் இன்று(12) தீர்மானமிக்க போட்டி இடம்பெறவுள்ள நிலையில், அவர் இவ்வாறு உபாதைக்கு உள்ளாகியுள்ளார். எனினும் பந்து தலையில் தாக்கியதால் திஸர பெரேராவுக்கு பாரதூரமான உபாதை எதுவும் ஏற்படவில்லை என கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் இது குறித்து கூறுகையில்;
“.. திஸர தலையில் பந்து தாக்கி காயம் என்றளவுக்கு இல்லாது உடல் நலம் தேறியுள்ளார். அவர் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய(12) போட்டியில் பங்கேற்பார்..” என தெரிவித்துள்ளார்.
Sri lanka cricket photo