வட மாகாண கல்வி அமைச்சர் பதவி விலகல்..

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, தமது பதவி விலகல் கடிதத்தை இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாடுகள் தொடர்பில் ஆராய குழு ஒன்று, முதலமைச்சரால் நியமிக்கப்பட்டது.

குறித்த அந்த குழுவின் அறிக்கையின் படி, வடமாகாண சபையின் பல அமைச்சர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்நிலையில் அது தொடர்பில் விவாதம் ஒன்று எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறும் என முதல்வரால் அறிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, தமது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)