சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து விலகி ஜனித் நாடு திரும்பினார்..

இந்திய அணிக்கிடையிலான போட்டியின் போது உபாதைக்குள்ளான இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா நாடு திரும்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை குழு “பி” யில் இடம்பெற்ற இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியின் போது துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 44 ஓட்டங்களைப் பெற்ற போது உபாதை காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் அவரின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக தனஞ்சய டி சில்வா அணியில் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் குசல் ஜனித் பெரேரா நாடு திரும்பியுள்ளார்.

 

(rizmira)