இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் அணியின் களத்தெடுப்பே.. சோகத்தில் மேத்யூஸ் கருத்து..

சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் அரையிறுதிக்கு முன்னேறத் தவறியமை குறித்தும் பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பினை பெற இடமளித்தமை குறித்தும் இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

“..மிகவும் மட்டமான களத்தடுப்பு காரணமாகவே சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் அரையிறுதி வாய்ப்பை தவற விட்டோம், கிட்டத்தட்ட மூன்று சுலபமான பிடிகளை விட்டு, பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடர்ந்து விளையாட வழிகோலியதே கடைசியில் இலங்கை அணியின் தோல்விக்கு வித்திட்டது. இந்த போட்டியை திரும்பிப் பார்க்கும்போது, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்பது தெரிகிறது.

அதுவும் எங்கள் களத்தடுப்பு மிகவும் மட்டமானதாக இருந்தது. நாங்கள் மட்டும் எங்களுக்கு வந்த பிடிகளை எடுத்திருந்தால், இன்று வேறொரு கதையைப் பற்றி பேசியிருப்போம். ஆனால், ஆட்டத்தின் முக்கியமான நேரங்களில் பிடிகளை நாங்கள் தொடர்ச்சியாக நழுவவிட்டோம்..” எனத் தெரிவித்திருந்தார்.

(rizmira)