UPDATE – சிறுமி மீது கனரக வாகனம் மோதுண்டதில் சிறுமி பலி.. போக்குவரத்து வழமைக்கு..

நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா நகரின் மஞ்சல் கடவையில் பாதை கடக்க முற்பட்ட 7 வயது சிறுமி மீது கனரக வாகனம் மோதுண்டதில் சிறுமி ஸ்தலத்திலே பலியானார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஆத்திரமுற்ற பொதுமக்கள் கனரக வாகனத்திற்கு தீ வைத்துள்ள நிலையினை அடுத்து குறித்த பிரதேசத்தில் பதற்ற நிலை உருவாகியிருந்ததாகவும் போக்குவரத்துகள் ஸ்தம்பித்த நிலையில், தற்போது காவற்துறையினரின் கட்டுப்பாட்டினுள் குறித்த பிரதேசம் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நானுஓயா ரயில் மேம்பாலத்திற்கு அருகில் உள்ள மஞ்சல் கடவையிலே இன்று (15) காலை 8 மணியளவில் குறித்த இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணை நானுஓயா பொலிஸார் மேற்கொள்கின்றனர்

(rizmira)