வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று நேற்று(14) வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியின் 6 உறுப்பினர்களுமாக மொத்தம் 21 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
வடக்கு ஆளுநர் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை முன்வைத்து முதலமைச்சர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.