முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பாரிய இலஞ்ச ஊழல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று(15) ஆஜராகவுள்ளார்.

காங்கேசந்துரை சீமேந்து தொழிற்சாலையின் பல கோடி ரூபா பெறுதியான உபகரணங்களை இரும்பின் பெறுதிக்கு விற்பனை செய்தமை குறித்து விசாரணை செய்யவே இவர் இவ்வாறு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே, வட மாகாண முன்னாள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரால் சத்துருசிங்க மற்றும் உதய பெரேரோ ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)