கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து புகையிரத ஓட்டுநர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20ம் திகதி நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக “லோகோமோடிவ் ஒப்பரேட்டிங் இஞ்சினியர்ஸ்” சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக இந்திக தொடங்கொட மேலும் கூறினார்.