நாளை முதல் நாட்டின் தென்மேற்கு பகுதியில் பலத்த மழை…

நாளை(23) இரவு முதல் நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்பட்ட மழை காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று(22) மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் என குறித்த அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் ஊவா மாகாணத்துடன், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

(rizmira)