நாடளாவிய ரீதியில் நீர்பாசனத்துறை பொறியியலாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்..

நாட்டின் அனைத்து நீர்பாசனத்துறை பொறியியலாளர்களும் இன்று(23) தொழிற்சங்க போராட்டத்தை நடத்தவுள்ளனர்.

நீர்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் டி.அபேசிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

நீர்பாசனத்துறை அமைச்சிக்கு புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்;
உரிய தகைமையை கொண்டிராத ஒருவர் குறித்த இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராகவே இந்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)