இந்தியா – மேற்.தீவு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று..

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று(23) நடைபெறவுள்ளது.

இங்கிலாந்தில், சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடிய இந்திய அணி இறுதிச் சுற்றில் பாகிஸ்தானிடம் மோசமான தோல்வியை தழுவியது.

சாம்பியன்ஸ் கிண்ணம் முடிந்ததும், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி அங்கிருந்து நேரடியாக மேற்கிந்திய தீவுக்கு புறப்பட்டு சென்றது.

இந்தியா அணி:

ஷிகர் தவான், ரஹானே அல்லது ரிஷாப் பான்ட், விராட் கோஹ்லி (கெப்டன்), டோனி, யுவராஜ்சிங், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், அஸ்வின் அல்லது குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி அல்லது உமேஷ் யாதவ்.

மேற்கிந்திய தீவு:

கீரன் பவெல், எவின் லீவிஸ், ஷாய் ஹோப், ஜோனதன் கார்டர், ஜாசன் முகமது, ரோஸ்டன் சேஸ், ரோவ்மன் பவெல், ஜாசன் ஹோல்டர் (கெப்டன்), ஆஷ்லே நர்ஸ் அல்லது தேவந்திர பிஷூ, மிக்யூல் கம்மின்ஸ், அல்ஜாரி ஜோசப்.

இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் குறித்த இந்த ஆட்டத்தை டென்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

(rizmira)