இரண்டு வைத்தியர்கள் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த வைத்தியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட சைட்டம் எதிர்ப்பு தரப்பினரால் கொழும்பு மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் விருந்துபசாரத்தின் போதே குறித்த இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதலில் காயமடைந்த வைத்தியர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திடம் வினவிய போது, அந்த இடத்தில் ஏற்பட்ட சிறு சம்பவம் மோதலாக மாறியதாகவும், மேலதிக தகவல்கள் தெரியவில்லை என்றும் குறித்த சங்கம் தெரிவித்தது.