சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளுக்கான இலங்கை அணி குழாம் அறிவிப்பு..

சிம்பாப்வே அணியுடன் இடம்பெறவுள்ள ஒரு நாள் போட்டிகளுக்கான 13 வீரர்களை கொண்ட இலங்கை அணி குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

வழக்கம் போல் அணியின் தலைவராக ஏஞ்சலோ மேத்யூசும், உப தலைவராக உபுல் தரங்கவும் செயற்படவுள்ளனர்.

இந்த குழாமில் புதிய வீரர்களான வனிது ஹசரங்க, லஹிரு மதுசாங்க மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

மேலும் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒத்தி வைக்கப்பட்ட தடையானது, எதிர்வரும் இந்திய மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடரை பாதிக்காது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை அணியின் குழாம்..

Angelo Mathews(c),Upul Tharanga,Niroshan Dickwella (wk),Danushka Gunathilaka,Kusal Mendis,Asela Gunaratne,Wanidu Hasaranga,Lakshan Sandakan,Akila Dananjaya,Nuwan Pradeep,Lasith Malinga,Dushmantha Chameera,Lahiru Madushanka.

 

(rizmira)