புதிதாக அரசியல் கட்சிகளது பதிவு குறித்த இறுதி முடிவு ஜூலையில்.. – மஹிந்த

புதிதாக அரசியல் கட்சிகளை பதிவு செய்வது தொடர்பில் இறுதித் தீர்மானத்துக்கு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிக்கு முன்னர் வரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

புதிய 92 கட்சிகள் தங்களைப் பதிவு செய்யுமாறு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எந்நேரத்திலும் தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஒன்றை நடாத்துவதற்குத் தேவையான அதிகாரிகள் எண்ணிக்கை தொடர்பிலான சுற்றுநிரூபம் ஜூலை 01 ஆம் திகதி வெளியிடப்படும் என தெரிவித்த அவர், இம்முறை வாக்காளர் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதியாகும் போது முடிவு செய்யவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் அறிவித்துள்ளார்

 

(rizmira)