இன்று கொழும்பின் பாதுகாப்பிற்காக பொலிசாரினால் 1000 சிறப்பு அதிரடிப்படையினர் களத்தில்..

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்படும் பாரியதொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பொலிஸ் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் ஆயிரத்திற்கும் மேலானோர் கொழும்பு நகரின் பாதுகாப்பிற்காக இன்று(28) தயார் நிலையில் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர் பீரங்கி வாகனங்கள், கலகம் அடக்கும் படையினர், பொலிசாரின் பாதைத் தடைகள் என்பவைகளை கொழும்பில் தேர்வு செய்யப்பட்ட சில இடங்களில் முன்னெச்சரிக்கைக்காக தயார் நிலையில் வைக்கவுள்ளதாகவும் குறித்த தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அது தவிர்ந்த ஜனாதிபதி செயலகம், பிரதமர் காரியாலயம், சுகாதார அமைச்சு, உயர் கல்வி அமைச்சு உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட அரச நிறுவனங்களதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

(rizmira)