நிதி மோசடி குறித்த வழக்கொன்றில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 3 பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த வழக்கு விசாரணை இன்று(28) இடம்பெற்ற நிலையில், 5 பிரதிவாதிகளில் இரண்டு பேர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதன்படி, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 3 பிரதிவாதிகளையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், முன்னிலையாகாத இரண்டு பிரதிவாதிகளுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளதுடன், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதேவேளை, 30 மில்லியன் ரூபாய் பணத்தை முறைக்கேடாக ஈட்டியமை தொடர்பில் நிதி மோசடி சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.