நான்கு மாகாணங்களுக்கு தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை..

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து மன்னார் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலான கடற்பிரதேசங்களில் மணிக்கு 55Km வேகத்திலும் அதிகமாக காற்று வீசும்.

நாட்டில் மணிக்கு சுமார் 50Km வேகத்தில் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சாய்வு பிரதேசங்கள் மற்றும் பிபிலி , மகியங்கனை பிரதேசங்களில் காற்று வீசும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(rizmira)