சீர்குலைந்த பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசினால் பல நடவடிக்கைகள் – பிரதமர்..

கடந்த இரண்டு வருட காலத்திற்குள் சீர்குலைந்த பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மாளிகாவத்தை ‘லக்கிரு செவன’ வீடமைப்புத் திட்டத்தின் முதல் கட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமக்களின் பாவனைக்காக நேற்று(28) கையளிக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

2015ம் ஆண்டளவில் பல வீடமைப்புத் திட்டங்கள் தடைப்பட்டிருந்தன. அரசாங்கம் நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் கடனுக்கான வட்டி ஆகக்கூடியளவில் காணப்பட்டது. இந்தச் சவால்களை கடந்த 2 வருட காலப்பகுதியில் அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொண்டது.

எதிர்வரும் 3 வருட காலப்பகுதியில் தற்போது நடைமுறையில் உள்ள திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டை அபிவிருத்தி செய்ய இரண்டு பிரதான கட்சிகள் மற்றும் மேலும் பல கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. நாட்டை அபிவிருத்தி செய்வதே நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உரையாற்றுகையில், குடிசைவாழ் மக்களுக்காக புதிதாக 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

(rizmira)