ஜப்பான் நாட்டின், நகோயா நகரிலுள்ள ஹிகாஷியாமா வன விலங்கு பூங்காவில் வாழும் ஷபானி என்ற கொரில்லா, ஜப்பானிய இளம்பெண்களை தனது தீவிர ரசிகர்களாக்கிக் கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பிறந்த ஆண் கொரில்லாவான ஷபானிக்கு தற்போது 18 வயதாகிறது. கடந்த 1996 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் பிறந்த ஷபானி, 2 மாத குழந்தையாக இருந்தபோது ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டது. அங்கு நல்ல முறையில் வளர்ந்து வந்த ஷபானி கடந்த 2007 ஆம் ஆண்டு ஜப்பானுக்கு கொண்டு வரப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஷபானியின் செய்கைகளுக்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த பலரும் ரசிகர்களாகியுள்ளனர்.
குறிப்பாக அந்நாட்டு இளம்பெண்கள் ஷபானியின் தீவிர ரசிகைகளாக மாறியுள்ளனர். ஷபானியை பற்றி இளம்பெண் ஒருவர் தனது டுவிட்டரில் ‘ஐக்மென்’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கு வசீகரமான தோற்றம் கொண்டவன் என பொருளாகும். அதே போல் ஹிகாஷியாமி பூங்காவுக்கு வந்த பார்வையாளர் ஒருவர் தனது டுவிட்டரில் கூறுகையில், விடுமுறை நாளில் அழகான கொரில்லா ஷபானியை சந்தித்தது மனதுக்கு மகிழ்ச்சியை அளித்தது என்று கூறியுள்ளார்.
அந்த அளவுக்கு பார்வையாளர்களின் மனங்களை ஷபானி கொள்ளையடித்து வைத்துள்ளான்.