எதிர்வரும் தினங்களில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்று(01) மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மழை பொழிய கூடும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மணித்தியாலத்திற்கு 50Km வேகத்தில் கடுமையான காற்று வீச கூடும் எனவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
(rizmira)