இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் வீரர்களுக்கு வழக்கப்படும் சம்பளம் குறித்து ஏராளமான ரசிகர்கள் தெரிந்திருக்க வாய்ப்புக்கள் குறைவு எனலாம். குறித்த குறிப்பு அவர்களது சம்பளம் குறித்தாகும்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் வீரர்கள் ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். அவை A,B,C,D,E ஆகும்.
திறமையான தரத்திலான வீரர்கள் A பகுதிக்கு உள்வாங்கப்படுவதோடு, குறித்த வீரர்கள் தேசிய பட்டியலில் ஐந்து ஆண்டுகள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
A – 1 கோடி 87 இலட்சம்
B – 1 கோடி 20 இலட்சம்
C – 90 இலட்சம்
D – 60 இலட்சம்
E – 30 இலட்சம்.
குறித்த உடன்படிக்கைப் பணம் விளையாடினாலும் இல்லாவிட்டாலும் கட்டாயம் வழங்கப்படும்.
போட்டியில் வெற்றி பெற்றாலும் இல்லாவிட்டாலும் குறித்த சம்பளம் வழங்கப்படும்.
டெஸ்ட் போட்டி- 07 இலட்சத்து 50 ஆயிரம்
ஒருநாள் போட்டி – 04 இலட்சத்து 50 ஆயிரம்
இருபதுக்கு இருபது போட்டி – 03 இலட்சம்
மேலும், டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டினால் போனஸ் முறையில் மேலும் 07 இலட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும்.
இன்னும், இலங்கை வீரர்களது தனிப்பட்ட திறமைகளுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
டெஸ்ட் சதத்திற்கு ரூ.07 இலட்சத்து 50 ஆயிரம்
டெஸ்ட் விக்கெட் ஐந்திற்கு 07 இலட்சத்து 50 ஆயிரம்
ஒருநாள் போட்டியில் சதத்திற்கு 07 இலட்சத்து 50 ஆயிரம்
ஒருநாள் போட்டியில் விக்கெட் ஐந்திற்கு 07 இலட்சத்து 50 ஆயிரம்
இது இலங்கை நிறுவனம் வழங்கும் ஊதியம், அது தவிர IPL , BPL , CPL , BBL முதலிய போட்டிகள் மற்றும் விளம்பரங்களுக்கு வேறு ஊதியம் வழங்கப்படும்.

கடந்த வருட ஒப்பந்த ஊதிய விவரம்.