கொழும்பு கோட்டை எஸ்-09 ரயில் பயண கண்காணிப்பு மேலாளரின் இடமாற்றத்தினை இரத்து செய்யுமாறு கோரி குறித்த ரயில் பயண கண்காணிப்பு அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் புகையிரத சேவைகள் பாதிப்படைந்துள்ளது.
எவ்வித காரணங்களும் இன்றி கண்காணிப்பு மேலாளரை வேறோர் இடத்திற்கு இடமாற்றம் செய்துள்ளதாகவும், அது சட்டத்திற்கு முரணானது எனவும் குறித்த அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.