தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பினர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகத்தில்..

நாளை(05) பராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று இன்று(04) காலை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினை காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் குறித்த சத்தியாக்கிரகத்தினை ஏற்பாடு செய்துள்ள (ஜாதிக சங்விதான எகமுது) தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
(rizmira)