அரச வைத்தியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு..

நாளை(05) முன்னெடுக்கப்பட இருந்த வேலை நிறுத்தம் ஒரு வார காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்(GMOA) தெரிவித்துள்ளது.

குறித்த சில காரணங்களை ஆராய்ந்து பார்த்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியாக நாளை(05) ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பணிநிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இன்று(04) கோரிக்கை விடுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

 

(rizmira)