தனது பதவியினை கபிலவுக்கு வழங்கியமைக்கான காரணத்தை முன்வைத்தார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்…

தனது பதவிக்கு புதிதாக ஒருவரை நியமித்தமை குறித்து எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்றும் ஜேர்மன் நாட்டிற்கான இலங்கை தூதுவராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

பாதுகாப்பு செயலாளராக கபில வைத்தியரத்ன நியமிக்கப்பட்டமை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்திருந்தார்.

தான் ஜேர்மன் தூதுவர் பதவிக்கு ஒன்றரை மாதத்திற்கு முன்னரே நியமிக்கப்பட்டதாகவும், தனது அரச கடமைகளை சரியாக நிறைவு செய்த பின்னர் குறித்த நியமிப்பை ஏற்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

(rizmira)