சைட்டத்திற்கு எதிராக வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தினை முன்னெடுப்பது பொறாமையினாலேயே.. – நெவில் பெர்னாண்டோ..

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தினை முன்னெடுப்பது சைட்டம் குறித்த பொறாமையிலும் நயவஞ்சக தன்மையிலும் என அந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமது நெவில் பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு இலவசமாக வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இன்னும், சைட்டம் நிறுவனமானது மனிதாபிமான வைத்தியர்களை உருவாக்குவதோடு அவர்கள் நோயாளர்களின் வயிற்றில் அடிப்போர் அல்லர் எனவும் நெவில் பெர்னாண்டோ கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)