சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 05 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குவைட்டிலிருந்து வருகை தந்த இளைஞர் இவற்றை நாட்டுக்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று(06) காலை 3.30 மணியளவில் குவைட் எயார்வேஸ் KU361 என்ற விமானத்தில் சந்தேகநபர் வருகை தந்துள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர் 50,000 ரூபா தண்டம் செலுத்தியதன் பின்னர் விடுவிக்கப்பட்டதாக பிரதி சங்கப் பணிப்பாளர் எம்.ஆர் சந்தன விஜேசேகர கூறினார்.
கைப்பற்றப்பட்ட சிகரட்டுக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.