தினேஸ் குணவர்தனவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு..

கடந்த அரசில் அம்பாறையில் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பல கோடி ரூபா பெறுமதியான நீர் விநியோகத் திட்டத்தில் இடம் பெற்ற மோசடி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவிடம் விசாரணை நடத்த எதிர்வரும் 10ம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு தினேஷ் குணவர்தனவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் குறித்த இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த காலப் பகுதியில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவராக கடமையாற்றிய கருணாசேன ஹெட்டியாரச்சியிடம் ஆணைக்குழு ஏற்கனவே விசாரணை நடத்தியிருந்தது.

இந்த நீர் விநியோகத் திட்டத்திற்காக அரசாங்க நிதியும் வெளிநாட்டு நிதியும் கிடைக்கப் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)