தொழிற்சங்கங்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தாது புதிய வரிச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உள்நாட்டு இறைவரித் திணைக்கள பணியாளர்கள் இன்று(07) அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபட உள்ளனர்.
அரசின் குறித்த இந்த நடவடிக்கையை எதிர்த்தே போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதான காரியாலயம் மற்றும் 17 மாவட்டக் காரியாலயங்கள் ஆகியனவற்றின் பணியாளர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளனர்.
புதிய வரித் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் முதல்கட்ட நடவடிக்கையாக இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அரசு தமது கோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்கத் தவறினால் கலால், சுங்க திணைக்கள தொழிற்சங்கங்களுடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் பாரியளவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்கள தொழிற்சங்க ஒன்றியத்தின் அழைப்பாளர் எச்.எல்.உதயசிறி மேலும் தெரிவித்துள்ளார்.