அமைச்சர்களின் வாகன கொள்வனவு மற்றும் வீடு திருத்தம் தொடர்பிலான குறைநிரப்பு பிரேரணையொன்று நாடாளுமன்றில் இன்று(07) சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மேலதிக நிதி ஒதுக்கல் ஊடாக, ஆண்டுக்காக மதிப்பிடப்பட்டு பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள முழு செலவினத் தொகையில் அதிகரிப்பு ஏற்படப் போவதில்லை என்று இந்த குறைநிரப்பு பிரேரணை யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் திருத்தம் செய்வது தொடர்பிலும் இந்த பிரேரணையில் உள்வாங்கப்பட்டுள்ளது.
(rizmira)