நாட்டின் சப்ரகமுவ , மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி , மாத்தறை, குருநாகல் மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பிரதேசங்களிலும், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று(07) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தென் மாகாணம் மற்றும் களுத்துறை பதுளை மாவட்டங்களில் மணிக்கு சுமார் 50Km வேகத்தில் பலமான காற்று வீசுக்கூடும்.
கிழக்கு கடற்கரை பகுதிகளின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடிமின்னல் மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுக்கூடும் . பொதுமக்கள் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்து மின்னல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அதன் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
(rizmira)