சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தாக்க கட்டளையிட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இன்று(10) மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை முன்வைக்கவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதல்களால் மாணவர்கள் 80பேருக்கு மேல் காயமடைந்திருந்ததாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
அது தவிர வீடுகளுக்கு சென்று பெற்றோர்களை மிரட்டுதல் மற்றும் சிவில் உடையில் வந்து துப்பாக்கியினை காட்டி மாணவர்களை கடத்துதல் உள்ளிட்டவையும் குறித்த முறைப்பாட்டில் உள்ளடங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
(rizmira)